நாங்க 'ஜெயிச்சதுக்கு' ஒரு விதத்துல 'சிஎஸ்கே' டீமும் காரணம்...! 'அவரு' சொன்னத ஒண்ணு விடாம 'FOLLOW' பண்ணினோம்...! 'கப் அடிச்சோம்...' - ஆரோன் பின்ச் மகிழ்ச்சி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் தன்னுடைய அணியான சிஎஸ்கே அணியில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து கூறியது, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியாக இருந்தது என கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து நிர்ணயித்த 172 ரன்களை 19 ஓவருக்கு முன்பே 8 விக்கெட் வித்யாசத்தில் முறியடித்தது.
இந்நிலையில், இதுகுறித்து கூறிய ஆஸ்திரேலிய அணி ஆரோன் பின்ச், 'எங்கள் அணியின் பந்துவீச்சு குழுவில் முக்கிய பங்காற்றியவர் ஹேசல்வுட். ஹேசல்வுட் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்தபோது அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை எல்லாம் எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக இறுதிப் போட்டியில் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம் என்பதை உணர்ந்து லைன் லென்த்தில் எவ்வாறு வீசுவது என்பதை எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துக்கொண்டார்.
ஐபிஎல் தொடரில் ஹேசல்வுட் சிறப்பாக விளையாடியது இந்த உலகக்கோப்பை தொடரில் எங்களுக்கு பெரிதும் உதவியது. இறுதிபோட்டியில் வெற்றிபெற இன்னொரு முக்கிய பங்காற்றியவர் மிட்ஷெல் மார்ஷ்.
இவர் பொதுவாக 4-வது வீரராக நடுவரிசையில்தான் களமிறங்குவார். ஆனால், 3-வது இடத்தில் இறங்குவதாகக் கேட்டார். நாங்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தோம். அதோடு, அவர் ஆடியதை அனைவரும் பார்திருப்பீர்கள்.
மேற்கு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் போட்டியை விரும்புவார்கள். சவால்களையும் விரும்பக்கூடியவர்கள்' என கூறி ஆரோன் பின்ச் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.