‘தல’ தோனியவே சீண்டிப் பார்க்கிறீங்களா..! ஒரே ஒரு கமெண்ட் தான்.. KKR-க்கு ‘நெத்தியடி’ பதில் கொடுத்த நம்ம ஜடேஜா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியை கிண்டலடித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் நேற்றைய கடைசி நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. 9 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்ய கடுமையாக போராடியது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியும் கடைசி விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற முனைப்பு காட்டியது.
அதனால் கடைசி 12 பந்துகளில் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. அப்போது களத்தில் இருந்த பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனால் போட்டி டிரா ஆனது.
இப்போட்டி முடிவடைந்த பின் ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேனை சூழ்ந்து நிற்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த போட்டோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தோனியை கிண்டல் செய்துள்ளது.
Its not a master stroke!Just a show off🤣
— Ravindrasinh jadeja (@imjadeja) January 9, 2022
ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேனை சூழ்ந்து இருப்பது போல, புனே அணிக்காக தோனி விளையாடியபோது கொல்கத்தா வீரர்கள் தோனியை சூழ்ந்து நிற்கும் போட்டோவை அந்த அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், ‘டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ள இந்த கிளாசிக் மூவ், டி20 போட்டியில் நிகழ்ந்த மாஸ்டர் ஸ்டோக்கை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்’ என குறிப்பிட்டுள்ளது. இதைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் கோபமடைந்து கொல்கத்தா அணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘இது மாஸ்டர் ஸ்ட்ரோக் இல்லை, வெறும் சோ பீஸ் தான்’ என கமெண்ட் செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் தோனியும், ஜடேஜாவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
