தோனி வாங்கியுள்ள மஞ்சள் நிற விண்டேஜ் கார்.. எழுபதுகளில் இந்த கார் பயங்கர ஃபேமஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட் விளையாட்டிற்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த விஷயம் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தான்.
பொதுவாக மனிதர்களுக்கு தங்கள் பயன்படுத்தும் வாகனம் என்பது தங்களின் வீட்டில் உள்ள ஒருவராக மாறி போவார்கள். அதனை ஒருகட்டத்தில் இழக்கும் போது மனசோர்வு உருவாகும். அந்த விதத்தில் வாகனங்களுக்கு மனிதர்களுக்குமான காதல் புதிதில்லை. இந்த நிலையில் ஒருகாலத்தில் நன்றாக ஓடி தற்போது அதை காலத்தின் நினைவாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விண்டேஜ் வாகனங்களை வாங்குவது பல ஆளுமைகளுக்கு பிடித்தமான ஒன்று.
அந்த விதத்தில் தோனி அவரது ராஞ்சி பண்ணை வீட்டில் அமைந்துள்ள கராஜில் பழங்கால விண்டேஜ் கார்கள் தொடங்கி பிராண்ட் நியூ கார்கள், பைக்குகள் என ரகம் ரகமாக வாகனங்கள் வாங்கி குவித்துள்ளார்.
எந்த வருடம் உருவாக்கப்பட்டது?
அதில் புது வரவாக இணையும் விண்டேஜ் கார் தான் லேண்ட் ரோவர் 3 ஸ்டேஷன் வேகன். இந்த கார் கடந்த 1971-இல் உருவாக்கப்பட்டது. இதனை இணையத்தின் மூலம் நடந்த ஏலத்தில் தோனி வாங்கியுள்ளார். 1971 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் வெளியான லேண்ட் ரோவர் கார்களில் இந்த 3 ஸ்டேஷன் வேகன் கார் மிகவும் பிரபலம் என கூறப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள்:
இந்த கார் உற்பத்தி செய்யப்பட்ட போது இரண்டு விதமான எஞ்சினை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2.3 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் முதல் 3.5 லிட்டர் V8 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 2 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸை இந்த கார் கொண்டிருந்துள்ளது. இதில் தோனி வாங்கியுள்ள காரில் என்ன இஞ்சின் இருக்கிறது என தெரியவில்லையாம். இந்த கார் மஞ்சள் நிற வண்ணத்தில் மிகவும் அழகாக உள்ளது.
ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா பிக்-அப் டிரக், போர்ஸ் பாக்ஸர், ஃபெராரி 500 ஜிடிஓ, ஆடி க்யூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ், கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் மற்றும் நிசான் ஜோங்கா கார்களை தோனி தற்போது வைத்துள்ளார்.