16.25 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எடுத்த பென் ஸ்டோக்ஸ்.. ஐபிஎல் ஆடுவது பற்றி வெளியான தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 22, 2023 09:27 PM

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் டி 20 லீக் தொடர் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உலக அளவில் உள்ளனர்.

CSK Ben stokes to leave ipl in last matches reportedly

                              Images are subject to © copyright to their respective owners

கடந்த டிசம்பர் மாதம், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றிருந்தது. இதில் மொத்தமுள்ள 10 அணிகளுமே ஏராளமான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியில் சொந்தமாக்கி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், க்ரூப் A வில் இடம்பெற்றுள்ளது. சென்னை, பெங்களூர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் க்ரூப் B ல் இடம்பெற்றுள்ளது. மேலும் மொத்தமுள்ள 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CSK Ben stokes to leave ipl in last matches reportedly

Images are subject to © copyright to their respective owners

மேலும் பல ஆண்டுகள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகள் ஆட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம் என்றும் ஒரு ஊகம் பரவி வரும் சூழலில், சென்னையில் நடைபெறும் 7 போட்டிகளை திருவிழா போல மாற்றவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனிடையே, சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள பிரபல வீரர் தற்போது எடுத்துள்ள முடிவு தொடர்பான விஷயம் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

அப்படி இருக்கையில் பென் ஸ்டோக்ஸ் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ், ஜூன் மாதம் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இதற்கு முன்பு ஜூன் முதல் வாரம், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து அணி மோத உள்ளது.

CSK Ben stokes to leave ipl in last matches reportedly

Images are subject to © copyright to their respective owners

இதில், பென் ஸ்டோக்ஸ் கலந்துகொள்வார் என தெரிவித்துள்ள சூழலில், ஐபிஎல் போட்டிகளின் கடைசி கட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. சிறந்த ஆல் ரவுண்டராக சிஎஸ்கே அணிக்கு பெரிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படும் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் விலகுவதாக வெளியான தகவல், கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

Tags : #BEN STOKES #CSK #MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK Ben stokes to leave ipl in last matches reportedly | Sports News.