'நண்பன், ப்ரோ, இன்ஸ்பிரேஷன்'.. இன்னும் ஒருபடிபோய் தோனியை புகழ்ந்த வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | May 08, 2019 01:39 PM

'மகேந்திர சிங் தோனி தான் தனது  உத்வேகம்' என்று மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

hardik pandya says about his relationship with dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ப்ளே ஆஃப் முதல் சுற்று சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, சி.எஸ்.கே.வை விட நன்றாக பேட் செய்து 18.3 ஓவர்களில் 132.4 என்று வெற்றிபெற்று 5-வது முறையாக ஐ.பி.எல். லீக் போட்டி இறுதிக்கு முன்னேறியது. 2019 ஐ.பி.எல் சீசன் போட்டிகளில் மும்பை அணியின் ஆல்ரவுண்டராக  ஹர்திக் பாண்டியா சிறப்பான பங்களிப்பபைச் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில், தோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு 'தோனிதான் எனது உத்வேகம், எனது சகோதரர், எனது நண்பர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கிரிகெட் ரசிகர்கள் எல்லோருக்கும் தோனி தான் முன்னுதாரணம்' என்று பாண்டியா தெரிவித்துள்ளார். 'ரசிகர்கள் மட்டுமில்லாது இளம் கிரிக்கெட் வீரர்களும் தோனியை தான் அதிக அளவில் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்' என்று ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

Tags : #HARDIKPANDYA #DHONI #MI