‘தல’ தோனி மாதிரி ஹெலிகாப்டர் சிக்ஸ்.. ‘மாஸ் காட்டிய ஹர்திக்’.. மிரண்டு போன டெல்லி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 18, 2019 11:09 PM

தோனியைப் போல் ஹெலிகாப்டர் ஷாட் அடுத்த ஹர்திக் பாண்ட்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Hardik\'s helicopter shot goes viral

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டி டெல்லியில் உள்ள ஃப்ந்ரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா(30) மற்றும் டி காக்(35) நிதனாமான தொடக்கத்தை கொடுத்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணல் பாண்ட்யா கூட்டணி அதிரடிகாட்டியது. இதில் ஹர்திக் 15 பந்துகளில் 32 ரன்களும், க்ருணல் 26 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 169  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  டெல்லி அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL2019 #IPL #ONEFAMILY #HARDIKPANDYA #DCVSMI #VIVOIPL