VIDEO: ‘என்னங்க இப்படி பொளக்குறாரு’!.. மிரண்டுபோய் நின்ற ஆஸ்திரேலிய பவுலர்.. கெத்து காட்டிய ‘சிஎஸ்கே’ சாம்பியன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 12, 2021 08:45 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அடித்த சிக்சர் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Bravo smashed one-handed six during WI vs AUS 2nd T20I

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

Bravo smashed one-handed six during WI vs AUS 2nd T20I

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹெட்மையர் 61 ரன்களும், பிராவோ 47 ரன்களும் எடுத்தனர். அதேபோல் 6-வதாக களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 8 பந்துகளில் 24 ரன்கள் (2 சிக்சர், 2 பவுண்டரி) அடித்து அசத்தினார்.

Bravo smashed one-handed six during WI vs AUS 2nd T20I

இதனை அடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் மட்டும் 54 ரன்கள் அடித்தார். இதனால் 19.2 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா இழந்தது. இதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்று வருகிறது.

Bravo smashed one-handed six during WI vs AUS 2nd T20I

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ அடித்த சிக்சர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்போட்டியின் 13-வது ஓவரை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டின் அகர் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட பிராவோ, ஒற்றைக் கையால் சிக்சர் அடித்தார். அதனால் பந்து கேலரியின் மேற்கூரை மீது விழுந்தது. இதனைப் பார்த்த பந்துவீச்சாளர் ஆஸ்டின் அகர் மிரண்டு போனார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக பிராவோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bravo smashed one-handed six during WI vs AUS 2nd T20I | Sports News.