“கெழட்டுப் பயலே!”.. “தோனி கிண்டல் பண்ணிகிட்டே இருந்தார்.. அதான் ஃபைனல் மேட்ச் முடிஞ்சதும்..”.. பிராவோ சொல்லும் வைரல் சீக்ரெட்ஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2018-ஆம் ஆண்டு வான்கடேவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்ரன் தோனியும், பிராவோவும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர். இந்த ஓட்டத்தில் இன்ச் இடைவெளியில் தோனி வெற்றி பெற்றார். இந்த ஓட்டப் பந்தயத்தை பற்றிதான் தற்போது பிராவோ தனது இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசியுள்ளார்.
அதில் “அந்த தொடர் முழுவதும் நான் பொறுமையா இருக்கேன்னும், எனக்கு வயசாகிடுச்சு, நான் ஒரு கிழவன்னும் தோனி கிண்டல் பண்ணிகிட்டேதான் இருந்தார். அதனால நான் அவர்கிட்ட சவால் விட்டேன். அதன் விளைவு அந்த தொடர் முடிஞ்சதும் நாங்கள் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றோம். ஏனென்றால் அடிபட்டுவிட்டால், போட்டித் தொடரில் விளையாடுவது சிரமம் ஆகிவிடும் என்பதால் போட்டித்தொடருக்கு பின்னரே பந்தயத்தை வைத்துக் கொள்லலாம் என்று யோசிச்சோம்” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
தவிர, தோனியும், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங்கும் தன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர்கள் தனக்கு முழு சுதந்திரம் அளிப்பதாகவும், டெத் ஓவர்களில் கூட தன் மீது நம்பிக்கை வைத்ததாகவும், அதற்கு தக்க பலன் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் இவர் அண்மையில் தோனி பற்றி பாடிய பாடலும் சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.