இந்த வருஷம் சிஎஸ்கேவுக்கு ‘ராசியே’ இல்ல.. இருக்குற வேதனையில ‘இடியாய்’ வந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ராஜாவாக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை அணி, இந்த வருட தொடரில் மிக மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் ப்ளே ஆஃப் செல்ல சென்னை அணிக்கு வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.
முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது பிராவோ காயமடைந்து வெளியேறினார். இதனால் அவரால் கடைசி ஓவரை வீச முடியாமல் போனது. அதனால் ஜடேஜா கடைசி ஓவரை வீசினார். அதில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. ஒருவேளை பிராவோ இருந்திருந்தால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்தநிலையில் பிராவோ காயம் குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார். அதில்,‘பிராவோவுக்கு இடுப்பில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இனிவரும் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார். இன்னும் ஓரிரு நாள்களில் அவர் நாடு திரும்பி விடுவார்’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இல்லாதது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தற்போது பிரோவோவும் காயம் காரணமாக வெளியேறுவது சென்னை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் சிஎஸ்கேவுக்கு ராசியே இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
