ரசிகர்களுக்கு ரெண்டு ‘சர்ப்ரைஸ்’.. சென்னை அணியில் ‘அதிரடி’ மாற்றம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணியின் ப்ளேயின் லெவனில் இரண்டு மாற்றங்களை கேப்டன் தோனி செய்துள்ளார்.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று (02.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். முரளி விஜய், ருதுராஜ் மற்றும் ஹஷல்வுட் ஆகிய மூன்று வீரர்களுக்கு பதிலாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பட்டி ராயுடு, பிராவோ மற்றும் ஷர்துல் தாகூர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையியில் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
Three changes for #CSK in the Playing XI for today's game.#SRH remain unchanged.#Dream11IPL #CSKvSRH pic.twitter.com/esFRDZZ3Qi
— IndianPremierLeague (@IPL) October 2, 2020

மற்ற செய்திகள்
