"2020ல CSKதான்.. தல தோனி-க்கு ரொம்ப பிடிச்சது இதான்".. பிராவோ பகிரும் சீக்ரெட்ஸ்.. வைரல் குத்தாட்டம்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோவுக்கு (DWAYNE BRAVO) அண்மையில் நடந்த பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருதுகள் விழாவில் ‘தி கோல்டன் குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - விளையாட்டு (THE GOLDEN ICON OF INSPIRATION -SPORTS)’ விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட பிராவோ, தனக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டதற்கும், சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் அளித்துவரும் தொடர் ஆதரவிற்கும் தன்னுடைய நன்றி மற்றும் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அதன் பின்னர் தான் நடித்துள்ள திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாகும் என்றும் கூறினார்.
மேலும் 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் மீண்டும் வெற்றிபெறும் என்று அதிரடியாகக் கூறி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், தல தோனிக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் என்கிற ரகசிய தகவலை முதல்முறையாக பகிர்ந்தார். தானும் தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிராவோ, தானும் அவரும் மாங்காய்களை விரும்பி உண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் சிஎஸ்கேவின் பாடல் ஒன்றுக்கு ரசிகர்களைக் கவரும் வகையிலான ஒரு ஆட்டத்தையும் போட்ட பிராவோ தான் பெற்ற விருதுடன் கெத்தாக ஹானர் வாக் சென்றார்.
