'சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யாரு?'.. 'அதெல்லாம் தல தோனி எப்பவோ தன் மனசுல..'.. பிராவோ அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்கிற இழுபறி நீடித்து வந்த நிலையில் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஐபிஎல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.
![CSK Next Captain already at the back of MSDhoni Mind Says Bravo CSK Next Captain already at the back of MSDhoni Mind Says Bravo](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/photo-csk-next-captain-already-at-the-back-of-msdhoni-mind-says-bravo.jpg)
இந்த தகவல் பிசிசிஐ தரப்பால் உறுதி செய்யப்பட்ட பிறகு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தோனி தனது ஓய்வை அறிவித்தார். இதனிடையே வரவிருக்கும் ஐபிஎல் போட்டியில்தான் தோனி களம் இறங்கவுள்ளார். எனினும் ஐபிஎல் தொடரில் தோனி எவ்வளவு காலம் நடிப்பார் என்பது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ள சூழ்நிலையில் சென்னை நிர்வாகம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கண்டிப்பாக தோனி அணியில் இருப்பார் என்று கூறியது, ஆனால் அடுத்த முடிவை தோனியே எடுப்பார் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் குறித்து சிஎஸ்கே வீரர் பிராவோ பேசியுள்ளார். அதில், “சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் குறித்து தோனியின் மனதில் நிச்சயம் முடிவு முடிவு இருக்கவே செய்யும். எல்லோரும் ஒருநாள் விலகும் நேரம் வரும். அப்படி தோனி தன்னுடைய பொறுப்புகளை விட்டு விலகும் பொழுது ரெய்னாவுக்கோ அல்லது அடுத்த இளம் வீரர் ஒருவரிடமோ கண்டிப்பாக பொறுப்பை ஒப்படைப்பார்” என்று பேசியுள்ளார்.
மேலும் பேசிய பிராவோ, “சிஎஸ்கேவின் ரசிகர்கள்தான் அணிக்கு பக்கபலம் என்றும் அவர்களின் தொடர் ஊக்கத்தால்தான் அணியின் வெற்றி ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)