நீங்க உண்மையாவே ‘வேறலெவல்’ தாங்க.. சிஎஸ்கே லிஸ்ட்டை வெளியிட்டதும் சர்ப்ரைஸாக வந்த வாழ்த்து.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
![Bravo, Faf du Plessis congratulate to CSK retention players Bravo, Faf du Plessis congratulate to CSK retention players](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/bravo-faf-du-plessis-congratulate-to-csk-retention-players-1.jpg)
அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைகின்றன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது.
அதன்படி நேற்று அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் மொயின் அலி, இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது.
இதில் ஆல்ரவுண்டர் பிராவோ, தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ், ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட இவர்களில் யாரேனும் ஒருவர் தக்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டு வீரர்களில் மொயின் அலியும், தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர்ருதுராஜ் கெய்க்வாட்டும் தக்கவைக்கப்பட்டனர்.
தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு பிராவோவும், டு பிளசிஸும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். தங்களை தக்க வைக்காவிட்டாலும், இருவரும் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால்தான் சிஎஸ்கே ஒரு குடும்பம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக குறிப்பிட்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)