‘இவுங்கள மாதிரி’... ‘எப்போ மாறப் போறீங்க’... ‘கேள்வி எழுப்பிய சவுரவ் கங்குலி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 20, 2019 11:13 AM

டெஸ்ட் போட்டிகளில் இதர அணிகள் தங்கள் தரத்தை உயர்த்துவது எப்போது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

Bhajji responds to Sourav suggestion for Test cricket\'s rise

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியின், முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.இதற்கு இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுக்க, இங்கிலாந்து கடுமையான சவால் கொடுத்தது.

இருந்தாலும் தட்டுத்தடுமாறிய ஆஸி., அணி ஒருவழியாக டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. லார்ட்ஸில் மழை குறுக்கீடு இருந்த போதும், கடைசி நேரத்தில் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 22ம் தேதி லீட்ஸில் துவங்குகிறது. இந்நிலையில், இதுகுறித்து கங்குலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஆஷஸ் தொடரால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் உயிருடன் உள்ளது. உலகின் மற்ற அணிகளுக்கு தரத்தை உயர்த்த வேண்டிய நேரமிது’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஹர்பஜன், கங்குலி கருத்தை ஆமோதித்து ட்வீட் செய்கையில், ‘அணிகள் பலமாக இருந்தால்தான் தரநிலைகளைப் பராமரிக்க முடியும். ஆனால் துயரகரமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சொல்லப்போனால் நியூஸிலாந்தில் நியூசிலாந்து 4 அணிகள்தான் வலுவான அணிகளாகத் திகழ்கிறது’ என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

Tags : #GANGULY #SOURAV #HARBHAJANSINGH