BGM Shortfilms 2019

‘மெர்சல் காட்டிய தம்பதி’... 'தல, தளபதி படங்களை வைத்து'... 'சிஎஸ்கே வீரரின் அசத்தல் ட்வீட்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Aug 13, 2019 05:09 PM

நெல்லையில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டியடித்த வயதான தம்பதியினருக்கு, இந்திய வீரர் ஹர்பஜன் சிங், அசத்தலாக ட்விட்டரில் பாராட்டி உள்ளார்.

harbhajan singh tweet on nellai old people incident

நெல்லை மாவட்டம் கடையம் அடுத்த கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை என்ற முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருவதால்,இவர்கள் இருவர் மட்டும் அங்கு உள்ளனர். இவர்கள் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினர். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி  செந்தாமரை, சிறிதும் தாமதிக்காமல் கையில் கிடைத்த செருப்பு, சேர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கொள்ளையர்களை தாக்கினார். பின்னர் சண்முகவேலும் சேர்ந்து கொள்ளையர்களை அடித்து விரட்டினார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதும் வயதான தம்பதியினரின் வீரத்தை பார்த்து அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லை தம்பதியனரை, தமிழ் பட கதாநாயகர்கள் அஜித் மற்றும் விஜய் படங்களை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

Tags : #HARBHAJANSINGH #CSK #TWEET