வயது தடையில்லை, திறமை போதும்.. உலகக்கோப்பைக்குப் பின் தோனி விளையாட வேண்டும்.. கூறிய முன்னாள் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 07, 2019 10:22 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னரும் தோனி விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி சிறப்பாக விளையாடி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். தோனியின் தலைமையில் விளையாடிய இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை மற்றும் டி20 போட்டிக்கான உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனையை படைத்தது.
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்தது. தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. அப்போது இப்போட்டியில் விளையாடிய தோனி தன் மீது விழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து 3 அரை சதங்களை விளாசி ஆட்டநாயகன் பட்டத்தைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பைத் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், ‘உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், தோனி உலகக்கோப்பைக்கு பின்னரும் விளையாட வேண்டும். விளையாடுவதற்கு திறமை இருந்தால் போதும். வயது முக்கியமில்லை’ என கங்குலி தெரிவித்துள்ளார்.
