இந்திய கிரிக்கெட் வீரர் விளையாட தடை..! பிசிசிஐ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..! காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 30, 2019 04:57 PM

அனுமதி பெறாமல் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதற்காக இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BCCI suspends Cricketer Rinku Singh for 3 months

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரிங்கு சிங் என்ற 21 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் இந்தியா ஏ அணியில் விளையாடி வருகிறார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சார்பாகவும் விளையாடியுள்ளார். தற்போது இலங்கை ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இந்தியா ஏ அணியில் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் அபுதாபில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ரிங்கு சிங் விளையாடியுள்ளார். இப்போட்டியில் விளையாடுவதற்கு முன்பு பிசிசிஐ-யிடம் முறையான அனுமதி பெறவில்லை. இதனால் விதிமுறைகளை மீறியதற்காக ரிங்கு சிங் மூன்று மாதம் விளையாட பிசிசிஐ தடைவித்துள்ளது. இந்த தடை வரும் ஜூன் மாதம் 1 -ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என கிரிக்பஃஸ்(cricbuzz) செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #BCCI #RINKU SINGH