IPL AUCTION 2022: இவங்க 10 பேரை எடுக்க தான் கடும் போட்டி நடக்கபோகுது பாருங்க.. லிஸ்ட்டை வெளியிட்ட பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிக்காக ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் வரும் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
வீரர்களின் பட்டியல் வெளியீடு
இந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப்பட்டியலை பிசிசிஐ இன்று (01.02.2021) வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகின்றனர். அதில் 44 புதிய வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
அடிப்படை விலை
இந்த பட்டியலில் 228 சர்வதேச வீரர்களும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 355 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அதில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இதில் அதிகபட்சமாக 48 வீரர்களுக்கு அடிப்படை விலை தலா ரூ.2 கோடியாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. 20 வீரர்களுக்கு அடிப்படை விலையாக ரூ. 1.50 கோடியும், 34 வீரர்களுக்கு ரூ.1 கோடி அடிப்படை விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாப் 10 வீரர்கள்
இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போட்டிப்போட்டு எடுக்க உள்ள நட்சத்திர வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் முதல் வீரராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடம்பெற்றுள்ளார். இதனை அடுத்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளசிஸ், ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
அடுத்ததாக இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், தென் ஆப்பிரிக்க வீரர்களான டி காக் மற்றும் ரபாடா மற்றும் நியூஸிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சிஎஸ்கே அணியில் விளையாடிய ஷர்துல் தாகூர், தீபர் சஹார் மற்றும் பெங்களூரு அணியில் விளையாடிய ஷர்சல் படேல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தடவை இந்தியாவில் ஐபிஎல் நடக்குமா?
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் முதல் பாதியும், அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதி ஐபிஎல் போட்டிகளும் நடைபெற்றது. அதனால் இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்தவே பிசிசிஐ விரும்புகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் மீண்டும் வெளிநாட்டில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
𝘽𝙞𝙜 𝙉𝙖𝙢𝙚𝙨 𝙖𝙩 𝙩𝙝𝙚 𝙈𝙚𝙜𝙖 𝘼𝙪𝙘𝙩𝙞𝙤𝙣 💪🏻
A bidding war on the cards 👍🏻 👍🏻
Here are the 1⃣0⃣ Marquee Players at the 2⃣0⃣2⃣2⃣ #IPLAuction 🔽 pic.twitter.com/lOF1hBCp8o
— IndianPremierLeague (@IPL) February 1, 2022