பயங்கர சத்தத்துடன் விழுந்த ‘இடி’.. அவசர அவசரமாக நிறுத்தப்பட்ட போட்டி.. ஆஷஸ் டெஸ்ட்டில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு அருகே இடி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹப்பா மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி எடுத்துள்ளது.
இந்த நிலையில் போட்டி நடந்த ஓவல் மைதானத்துக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் பந்தை எதிர் கொள்ளாமல் விலகினார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.
What a dramatic capture on stump cam! #Lightning #thunderstorm #Ashes #Adelaide #AUSvENG pic.twitter.com/MVPTT4DzZO
— Gautam Bhimani (@gbhimani) December 17, 2021
ஆனாலும் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த இடி விழுந்த காட்சி ஸ்டம்பில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவானது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.