'கிரிக்கெட்' மைதானத்தில் 'கால்பந்து' விளையாடிய 'வீரர்கள்'... திடீரென பாய்ந்த 'மின்னல்'... '2' இளம் கிரிக்கெட் வீரர்கள் 'மரணம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்காளதேசத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் அக்டோபர் ஆகிய மாதங்களுக்கு இடையே அதிக மழை பெய்து வரும் நிலையில், ஏற்படும் மின்னல் மற்றும் இடி ஆகியவற்றால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், வங்காளதேச தலைநகரான டாக்காவின் காசிப்பூர் பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் மழை பெய்ததன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து ஆடியுள்ளனர். அப்போது திடீரென தாக்கிய மின்னலில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரர்களான முஹமது நதீம் (Mohammad Nadim) மற்றும் மீஷானுர் ரஹ்மான் (Mizanur Rahman) உட்பட மூன்று பேர் மீது மின்னல் தாக்கியுள்ளது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனை சேர்த்துள்ளனர். ஆனால், அதில் முஹமது நதீம் மற்றும் மீஷானுர் ரஹ்மான் ஆகியோர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, அவர்களின் பயிற்சியாளர் தெரிவிக்கையில், 'உயிரிழந்த இரண்டு பேரும் மிகச் சிறந்த வீரர்கள். தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு வேண்டித் தயாராகிக் கொண்டிருந்தார்கள்' என உருக்கத்துடன் தெரிவித்தார்.
இந்தாண்டில் மட்டும் வங்காளதேசத்தில் சுமார் 350 பேர் வரை மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.