FAKE INSTAGRAM ID.. புரொபைல் போட்டோவில் வேறொரு நபர்.. ஏமாந்த 100-க்கும் மேற்பட்ட பெண்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 12, 2022 04:49 PM

இன்ஸ்டாகிராமில் வேறு நபரின் புகைப்படத்தை பயன்படுத்தி 100-க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Arani youth cheats women on Instagram by using fake account

‘ஒரு சீனியர் ப்ளேயர் கிட்ட இப்படி நடந்துப்பீங்க’.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்டுள்ள இவரது புகைப்படத்தை பயன்படுத்தி ஆரணியை சேர்ந்த பயாஸ் (24) என்பவர் பல பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பெற்று வந்தள்ளார்.

இன்ஸ்டாகிராம் தனது நண்பன் புகைப்படம் தவறாக பயன்படுத்தப்படுவதை அறிந்த பாலாஜியின் நண்பர் இதுதொடர்பாக அவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் உண்மையான நபர் யார் என விசாரித்துள்ளார். அதில் ஆரணி சபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இளம்பெண் போல் பயாஸுக்கு மெசேஜ் குறுஞ்செய்தி அனுப்பி ஆரணி கோட்டை மைதானத்திற்கு வரவழைத்தனர். அப்போது அங்கு வந்த பயாஸிடம், தனது புகைப்படத்தை அகற்றுமாறு பாலாஜி கேட்டுள்ளார். ஆனால் புகைப்படத்தை அகற்ற மறுத்து பாலாஜியை பயாஸ் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக ஆரணி காவல் நிலையத்தில் பாலாஜி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் பயாஸை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், பயாஸின் செல்போனை சோதனை செய்ததில் 100-க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக பேசி லட்ச கணக்கில் பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பயாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேற டீமுக்கு போனாலும் பழச மறக்காத டு பிளசிஸ்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்ததும் செய்த செயல்..!

Tags : #YOUTH #CHEATS #WOMEN #INSTAGRAM #FAKE ACCOUNT #இளைஞர் #இன்ஸ்டாகிராம் #ஆரணி #இளம்பெண்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Arani youth cheats women on Instagram by using fake account | Sports News.