வேற டீமுக்கு போனாலும் பழச மறக்காத டு பிளசிஸ்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்ததும் செய்த செயல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே வீரர்களை பார்த்ததும் டு பிளசிஸ் செய்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்றைய (12.04.2022) 22-வது லீக் ஆட்டத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேஅணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது.
அதனால் இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி முனைப்பு காட்டி வருகிறது. அதேவேளையில் சிஎஸ்கே அணியில் முன்னதாக விளையாடிய டு பிளசிஸ், ஜோஸ் ஹசில்வுட் ஆகியோர் பெங்களூரு அணிக்காக விளையாடுகின்றனர். இது சிஎஸ்கே அணிக்கு சற்று சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மைதானத்தில் பயிற்சிகாக சென்ற டு பிளசிஸ், சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, தோனி, ராபின் உத்தப்பா, பிராவோ உள்ளிட்டோரை ஓடிச்சென்று கட்டித்தழுவினார். மிகுந்த உற்சாகத்துடன் அவர்களிடம் பேசி மகிழ்ந்தார். அதேபோல் விராட் கோலியும் தோனி, ஜடேஜாவை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Their bond 🥰❤️💛#cskvsrcb #IPL2022 pic.twitter.com/UDtG5IHISf
— . (@ThoufMSD) April 11, 2022
"கொரோனா விஷயத்துல இதை சாதிக்க உதவுன எல்லோருக்கும் நன்றி"…. பிரபல மருத்துவனை Dean நெகிழ்ச்சி தகவல்!

மற்ற செய்திகள்
