சதம் அடிச்சிட்டு கொண்டாடிய ரோஹித்.. சூரிய குமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jan 25, 2023 12:35 PM

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சதம் அடிக்க, அப்போது சூரிய குமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன் தான் பலரையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Surya Kumar Yadav reaction after Rohit got 100 against NZ

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | 4 வயசு தான்.. ஐன்ஸ்டீனையே மிஞ்சிடுவான் போலயே.. மூளை திறனை டெஸ்ட் பண்ணிட்டு உறைந்துபோன அதிகாரிகள்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி அடி இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இதனால் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

Surya Kumar Yadav reaction after Rohit got 100 against NZ

Images are subject to © copyright to their respective owners.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1101 நாட்கள் கழித்து ஒரு நாள் போட்டியில் தனது சதத்தை அடித்தார் ரோஹித் சர்மா. மேலும் முழு நேர கேப்டன் ஆன பிறகு அவர் அடித்த முதல் ஒரு நாள் சதம் இதுவாகும். இது தவிர, ஒருநாள் போட்டியில் தன்னுடைய 30ஆவது சதத்தை அடித்துள்ள ரோஹித் சர்மா, ஒரு நாள் போட்டியில் அதிக சதமடித்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் சமன் செய்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 46 சதங்களுடன் விராட் கோலி இரண்டாம் இடத்திலும், 30 சதங்களுடன் ரோஹித் ஷர்மா 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

Surya Kumar Yadav reaction after Rohit got 100 against NZ

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே நேற்றைய போட்டியில் சதம் அடித்தபிறகு ரோஹித் தனது பேட்டை உயர்த்தி காண்பிக்க. இந்திய அணி வீரர்கள் கரகோஷம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர். அப்போது, இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரிய குமார் யாதவ் தனது இரு கைகளையும் சிக்ஸர் என்பது போல சைகை காட்டினார். ஆகவே, அவர் ரோஹித்திடம் இருந்து இன்னும் சிக்ஸர்களை எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கவலையில்ல".. தோனிக்கு வார்னிங் கொடுத்த ரவி சாஸ்திரி.. போட்டு உடைத்த முன்னாள் பயிற்சியாளர்..!

Tags : #CRICKET #SURYA KUMAR YADAV #ROHIT SHARMA #NZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Surya Kumar Yadav reaction after Rohit got 100 against NZ | Sports News.