"நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் கவலையில்ல".. தோனிக்கு வார்னிங் கொடுத்த ரவி சாஸ்திரி.. போட்டு உடைத்த முன்னாள் பயிற்சியாளர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jan 25, 2023 12:00 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்டித்தது பற்றி மனம் திறந்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர்.

Ravi shastri warning MS Dhoni former coach R Sridhar opens up

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங்-கிற்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி  கொடுத்த எச்சரிக்கை பற்றி இந்தியாவின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவருடைய ‘Coaching Beyond: My Days with the Indian Cricket Team’ எனும் புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில் இந்திய கிரிக்கெட் அணி பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Ravi shastri warning MS Dhoni former coach R Sridhar opens up

Courtesy: Reuters

அந்த புத்தகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான தொடர் குறித்து ஸ்ரீதர் எழுதி இருக்கிறார். அந்தத் தொடரின் டி20 தொடரை இந்தியா 2-1 என்று வென்றிருந்தது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அப்போட்டியில் ஜோ ரூட் 113 ரன்களை விளாச அந்த அணி 322 ரன்களை குவிந்திருந்தது.

இதனை சேஸ் செய்யும்போது இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் விராட் கோலி, ரெய்னா ஆகியோர் அவுட் ஆன பிறகு களத்திற்கு வந்த தோனி மிக நிதானமாக ஆடியதாகவும் இந்த ஆட்டமே தோல்விக்கு காரணம் என ரவி கோபமடைந்ததாகவும் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார். அப்போட்டியில் தோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ravi shastri warning MS Dhoni former coach R Sridhar opens up

Image Credit: ESPN Cricinfo

மேலும், இப்போட்டிக்கு பிறகு நடைபெற்ற மீட்டிங்கில்,"நீங்கள் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் மீண்டும் ஒரு முறை இப்படி வெற்றிக்கான முயற்சியை மேற்கொள்ளாமல் சரணடைவது கூடாது. என் தலைமையில் இது நடக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இன்னொரு முறை வெற்றிக்காக ஆடாமல் சொதப்பினால் அந்த வீரருக்கு அதுதான் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். போட்டியில் தோல்வியடைவது அவமானமில்லை, ஆனால் இப்படி போராடாமல் தாரை வார்ப்பது கூடாது" என ரவி கூறியதாக ஸ்ரீதர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | 4 வயசு தான்.. ஐன்ஸ்டீனையே மிஞ்சிடுவான் போலயே.. மூளை திறனை டெஸ்ட் பண்ணிட்டு உறைந்துபோன அதிகாரிகள்..!

Tags : #CRICKET #RAVI SHASTRI #MS DHONI #R SRIDHAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravi shastri warning MS Dhoni former coach R Sridhar opens up | Sports News.