மேட்ச் நடுவே மாரடைப்பால் சரிந்த போலீஸ் அதிகாரி.. பரபரப்பான ஊழியர்கள்.. உயிரை காப்பாத்திய உதவி.. INDIA VS NEW ZEALAND
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து - இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த காவல்துறை அதிகாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணிக்காக அங்கே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, காவல்துறை ஏற்பாடுகளை கவனிக்க DSP சவுகான் அங்கே பணியில் ஈடுபட்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் அருகே இருந்த ஊழியர்கள் மற்றும் சக போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
Image Credit: BCCI
இதனை தொடர்ந்து, அங்கு நின்றிருந்த ஆம்புலன்ஸை அழைத்துவர சிலர் முயன்றுள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கே இல்லாததால் போலீஸ் வாகனத்தின் மூலம் சவுகானை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர் அதிகாரிகள். மேலும், தக்க நேரத்தில் அவருக்கு CPR எனப்படும் உயிர் காக்கும் முதலுதவியும் அளிக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் அதிகாரி ஒருவர் CPR அளித்து சவுகானை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து பேசிய இந்தூர் இணை கமிஷனர் பிரஷாந்த் தூபே, தற்போது சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஆம்புலன்ஸ் டிரைவர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூபே தெரிவித்திருக்கிறார்.
Also Read | சதம் அடிச்சிட்டு கொண்டாடிய ரோஹித்.. சூரிய குமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. வைரலாகும் வீடியோ..!

மற்ற செய்திகள்
