"'தோனி'ய எதுக்கு 'டீம்'ல எடுத்து வெச்சுருக்கீங்க??... அவரு அப்படி என்னத்த பண்ணிட்டாரு??..." முன்னாள் வீரரின் பேச்சால் 'பரபரப்பு'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டி, ஒரு நாள் மற்றும் டி 20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கான கனவு அணியை சில தினங்களுக்கு முன் ஐசிசி அறிவித்திருந்தது.
இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்திய கேப்டன் கோலி இடம்பெற்றிருந்த நிலையில், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு கேப்டனாக தோனி பெயரை ஐசிசி வெளியிட்டிருந்தது. தோனி தலைமையில் இந்திய அணி பல கோப்பைகளை கைப்பற்றியுள்ள நிலையில், தோனிக்கும், கனவு அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஐசிசியின் டி 20 கனவு அணியில் தோனி இடம்பெற்றுள்ளதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 'இந்த பத்தாண்டு கால கிரிக்கெட் போட்டிகளில் இந்திய டி 20 அணியை எடுத்துக் கொண்டால் இந்திய அணி கோப்பைகள் எதையும் கைப்பற்றியதில்லை. அதே போல தோனியும் டி 20களில் சிறந்தவொரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி அணியில் தேர்வானார்?. டி 20 அணியை தேர்வு செய்யும் போது அதில் ஜோஸ் பட்லர் போன்ற வீரர்கள் ஏன் இடம்பெறவில்லை?' என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
தோனிக்கு பதிலாக பட்லரை ஏன் ஐசிசி தேர்வு செய்யவில்லை என்பதைத் தான் ஆகாஷ் சோப்ரா அப்படி குறிப்பிட்டுள்ளார். தோனி குறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ள இந்த கருத்து கடும் பரபரப்பை கிளப்பியுள்ளது. முன்னதாக, ஐசிசி கனவு அணியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் யாரும் இடம்பெறாமல் போனதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.