'எப்படியும் அவருக்கு குட்பை தான்!!!'... 'அதோட CSKல இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியமில்ல?!!'... 'லிஸ்ட் கொடுக்கும் பிரபல வீரர்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை நீக்கலாம் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு நடந்த முடிந்த ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு படுமோசமானதாக அமைந்து அந்த அணி பிளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. சிஎஸ்கே அணியில் பெரும்பாலான வீரர்கள் தொடர் முழுவதுமே சொதப்பியதால், அவர்களில் பலரும் அடுத்த சீசனுக்கு முன் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் இருக்கும் முத்த வீரர்கள் பலரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அடுத்து நடக்கவுள்ள மெகா ஏலத்தில் இளம்வீரர்களை அதிகமாக எடுத்து அணியை கட்டமைக்கும் முயற்சியில் சிஎஸ்கே நிர்வாகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை அடுத்த சீசனுக்குள் நீக்கலாம் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர், "ஷேன் வாட்சன் ஏற்கெனவே விடைபெற்றுவிட்டார். இம்ரான் தாஹிரும் கண்டிப்பாக கிளம்பிவிடுவார்.
கேதர் ஜாதாவிற்கு எப்படியும் அந்த அணி குட்பை சொல்லிவிடும். அதோடு முரளி விஜயை சிஎஸ்கே கழட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மேலும் சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் விளையாடிய பல வீரர்களையும் இனி பார்க்க முடியாது. பியூஸ் சாவ்லா, மோனு சிங் ஆகியோரும் இனி சிஎஸ்கே அணி இருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அந்த அணி அடுத்த சீசனில் முழுவதுமாக கட்டமைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
