அவரு கேட்ட கேள்விய 'ஃப்ரேம்' போட்டு வச்சுக்கோங்க...! 'முன்னாள் வீரரை கலாய்த்த நெட்டிசன்...' - தரமான 'பதிலடி' கொடுத்த சேவாக்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுட்விட்டரில் ஷேன் வார்னை கலாய்த்த நெட்டிசன்களை சேவாக் இடையில் புகுந்து மூக்கை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இருக்கும் பௌலர்கள் குறித்து ஷேன் வார்ன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடிருந்தார். இந்நிலையில் வார்னின் கருத்திற்கு சிலர் கிண்டலும் அடித்துள்ளனர்.
ஷேன் வார்ன் தன் ட்விட்டர் பதிவில், 'ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதியில் நியூசிலாந்து ஒரு ஸ்பின்னரை அணியில் சேர்க்காதது ஏமாற்றமளிக்கிறது.
பவுலர்களின் காலடித்தடங்கள் பெரிய அளவில் பிட்சில் தெரிவதால் இந்தப் பிட்ச் ஸ்பின் ஆகும் வாய்ப்புள்ளது. அப்படி ஸ்பின் எடுக்கும் பட்சத்தில் இந்தியா 275/300 ரன்கள் எடுக்குமேயானால் மழை பெய்யும் முன்பே மேட்ச் முடிந்து விடும்' என ட்வீட் செய்திருந்தார்.
ஷேன் வார்னனின் இந்த ட்விட்டருக்கு மக்கா என்ற ஒரு நெட்டிசன், 'ஷேன் உங்களுக்கு ஸ்பின் எப்படி ஒர்க் செய்யும் என்று தெரியுமா? பிட்ச் வறண்டிருக்க வேண்டும் இங்கோ மழை பெய்கிறது' எனக் கிண்டலடித்துள்ளார். அவரை தொடர்ந்து பலர் சர்காஸ்ட்டிக்காக கிண்டலடித்துள்ளனர்.
இதனை கண்ட நம் சேவாக்கோ நெட்டிசன்களைக் கேலி செய்யும் விதமாக, 'அதானே, இவரது கேள்வியை ஃப்ரேம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் வார்ன். ஸ்பின்னை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்' என்று சிரிப்பு எமோஜியைப் போட்டு அந்த நெட்டிசனைக் கிண்டல் செய்துள்ளார்.
Frame this, @ShaneWarne and try to understand some spin 🤣 pic.twitter.com/jHpacxg9CQ
— Virender Sehwag (@virendersehwag) June 19, 2021
இதற்கு காரணம் பந்துகள் திரும்பவே திரும்பாது என்ற பிட்ச்களிலும் ஷேன் வார்ன் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ள மிகப்பெரிய ஸ்பின் மேதை. அவருக்கு என்னமோ ஸ்பின் என்றால் என்னவென்றே தெரியாத மாதிரி கலாய்த்து சிலர் பதிவிடுகின்றனர்.

மற்ற செய்திகள்
