'இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்கா மரணம்'.. பிரேத பரிசோதனையில் பரபரப்பு திருப்பம்!!.. சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இலங்கை தாதா மரணத்தில் அவர் இயற்கையாகவே உயிரிழந்துள்ளார் என்று அதிரடியாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவகாமி சுந்தரி என்பவர் கோவை சேரன்மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதீப் சிங்கர் என்பவர் உயிரிழந்து விட்டதாக பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அத்துடன் அவரது அடையாள அட்டையயும் சமர்ப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் சடலத்தை பெற்றுக்கொண்ட சிவகாமி சுந்தரி மற்றும் அவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்புவை சேர்ந்த அமானி தான்ஜி இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்து தெரியவந்துள்ளது.
இவ்வழக்கு குறித்த சந்தேகித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த நபரின் உண்மையான பெயர் அங்கொட லொக்கா என்றும் அவர் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த தாதா என்றும் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் என்றும் தெரியவந்தது. அத்துடன் கோவை சேரன்மாநகரில் வீடு எடுத்து தங்கி தனது காதலி அமானி தான்ஜியுடன் ஆகியோரின் உண்மையான பெயர் மற்றும் குடியுரிமை மறைத்து போலி ஆதார் அட்டை பெறுவதற்கான ஆவணங்களை அவர் வழங்கியதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட தகவல்கள் உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கோவையில் இருந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானது என்று பிரேத பரிசோதனை முடிவுகளில் இருந்து தெரியவருவதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
