இப்படி 'கேப்' விடாம அடிச்சா என்ன தான் பண்றது...! 'கேரளாவில் 'சிகா வைரஸ்' இருக்குன்னு கன்ஃபார்ம் பண்ணியாச்சு...' - அடுத்த தலைவலி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தாக்குதலே இன்னும் குறையாத கேரளாவில் மீண்டும் கொசுவினால் பரவும் கடுமையான நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் தற்போது ஜிகா வைரஸ் என்ற வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு பல நாட்களாக காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதோடு அவருக்கு கடந்த 7-ஆம் தேதி குழந்தை பிறந்ததுள்ளது.
இந்நிலையில் அவரின் ரத்த மாதிரிகளை சேகரித்து புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த நிலையில், அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
இன்னும் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே மறையாத சூழலில் இந்த புது ஜிகா வைரஸ் கேரள அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.
அதோடு ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடிய இந்த ஜிகா வைரஸை கட்டுப்படுத்த சுகாதார பணிகள், கொசு ஒழிப்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.