சிறுவனுடன் வளர்ந்த உறவு..100 ஆபாச மெசேஜ்கள்.. திடுக்கிட வைத்த 35 வயது பெண்
முகப்பு > செய்திகள் > உலகம்சுசெக்ஸ் : 15 வயது சிறுவனை ஏமாற்றி, 35 வயது பெண் செய்த காரியம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சுசெக்ஸ் எனும் பகுதியைச் சேர்ந்தவர் கரோல் டெய்லர் (வயது 35). இவர் இன்ஸ்டாகிராம் மூலம், 15 வயது சிறுவன் ஒருவனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மூலம், அந்த சிறுவனிடம் தினமும் கரோல் பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், நேரில் பார்க்க வேண்டும் என்றும், கரோல் தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.
எச்சரித்த கரோல்
இதனைத் தொடர்ந்து, கரோல் கூறிய இடத்திற்கு, அவரைப் பார்க்க வேண்டி, சிறுவனும் சென்றுள்ளான். அப்போது, அந்த சிறுவனுடன் வலுக்கட்டாயமாக, இரண்டு முறை கரோல் உடலுறவு கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், சிறுவனை கரோல் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.
அவதிப்பட்ட சிறுவன்
இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், சிறுவனுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து, தன்னுடைய வீட்டிற்கும் வந்து போகும் படி, கரோல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கரோல் தன்னைத் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த காரணத்தினால், அதை தாங்கிக் கொள்ள முடியாமல், சிறுவன் அவதிப்பட்டு வந்துள்ளான்.
பெற்றோர் அதிர்ச்சி
இறுதியில், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து, பெற்றோர்களிடமும் கூற வேண்டும் என முடிவு செய்துள்ளான். தொடர்ந்து, தனது மகனுக்கு 35 வயது பெண் ஒருவர், செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சம்பவம், சிறுவனின் பெற்றோர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
போலீசார் விசாரணை
உடனடியாக, அவர்களும் கரோல் மீது போலீசில் புகாரளித்துள்ளனர். தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியானது. கரோல், அந்த சிறுவனுக்கு நாள்தோறும் சுமார் 100 மெசேஜ்கள் வரை, இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியுள்ளார். இவை அனைத்துமே, ஆபாசம் நிறைந்து இருப்பதை போலீசார், விசாரணையில் தெரிந்து கொண்டனர்.
கையில் பையுடன் வந்த பெண்.. பைக்குள்ள இருந்தத பார்த்து வெலவெலத்து போன போலீஸ்!.. பரபரப்பு சம்பவம்!!
சிறைத் தண்டனை
இதனைத் தொடர்ந்து, கரோல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுவனை ஏமாற்றி, மிரட்டி, உடலுறவு மற்றும் மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்ததால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கரோலுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு பாராட்டு
தனக்கு நேர்ந்த கொடுமை பற்றிய ஆதாரங்களை, சரியாக ஒப்படைத்து, தைரியமாக செயல்பட்ட சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், 35 வயது பெண் ஒருவரால், 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த இந்த கதி, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
போர் அடித்ததால் விலகிய காதலர்கள்.. நடுத்தெருவுக்கு வந்த காதலிகள்
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான தவறுகள் குறைக்க வேண்டும் என்றால், அதில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பல கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

மற்ற செய்திகள்
