'மொத்தம் 50 கிளைகள மூட போறோம்...' 'அதிரடி தகவலை வெளியிட்ட...' - பிரபல தனியார் வங்கி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவெங்கும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில் முதன்மையாக தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது.
இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. மேலும் சில நிறுவனங்களை மூடி வருகின்றன. அந்த வகையில் எஸ் பேங்க் நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தங்களது வங்கியின் 50 கிளைகளை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை வங்கியின் தலைமை நிர்வாகி உறுதி செய்துள்ளார். தொடர்ந்து இயங்கி வரும் பிற கிளைகளிலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி இயக்க செயல்பாடுகளின் செலவுகளில் 21 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் வங்கிகளையும் அதன் செலவினத்தில் 20 சதவிகிதம் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.