காலிப்பணியிடங்களை நிரப்பும் ‘பிரபல’ வங்கி.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு.. முழுவிவரம் உள்ளே..!
முகப்பு > செய்திகள் > வணிகம்நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ (SBI) வங்கியில் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் (Executive) 241 பணியிடங்களும், சீனியர் எக்ஸிகியூட்டிவ் (Sr. Executive) பிரிவில் 85 பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் sbi.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜுலை 13-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினர், பொருளாதரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது உள்ள கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு நேர்முகத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
