அண்ணனோட கல்யாணம்.. வெளிநாட்டுல இருந்து சர்ப்ரைஸா வந்து நின்ன தங்கச்சி.. அப்பா கொடுத்த ரியாக்ஷன் தான்😍.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாட்டில் இருந்து தனது சகோதரருடைய திருமணத்திற்கு சர்ப்ரைஸாக சென்றதாக பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
![Woman who studied in UK Surprisingly attend her brother wedding Woman who studied in UK Surprisingly attend her brother wedding](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/woman-who-studied-in-uk-surprisingly-attend-her-brother-wedding.jpeg)
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 'வாத்தி' விக்ரமன் மற்றும் ஷிவினின் உதவி.. 'வயிறார' வாழ்த்திய குழந்தைகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் வீடியோக்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அந்த வகையில் தனது சகோதரரின் திருமணத்திற்கு சர்ப்ரைஸாக சென்றதாக பெண் ஒருவர் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக திருமணம் என்றாலே சொந்த பந்தங்கள் கூட்டமும் பல மகிழ்வான தருணங்களின் வெளிப்பாடாகவும் இருக்கும். ஆனால், நமது அன்புக்குரியவர்கள் அந்த தருணத்தில் நம்முடன் இல்லை என்றால் நிச்சயம் அது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், ஷ்ரத்தா ஷெலெர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய சகோதரரின் திருமணத்துக்கு தான் சர்ப்ரைஸாக செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
பெர்மிங்கம் விமான நிலையத்தில் துவங்கும் இந்த வீடியோ திருமண மண்டத்தில் முடிவடைகிறது. விமான பயணத்தை முடித்து திருமணம் நடைபெறும் இடத்துக்கு செல்லும் ஷ்ரத்தாவை கண்டு அவரது உறவினர்கள் திகைத்துப் போகிறார்கள். அப்போது அவருடைய தாய் மற்றும் தந்தை கண்கலங்கியபடி ஓடிச் சென்று கட்டியணைத்துக்கொள்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அதன்பின்னர் அவரை கண்ட மணமகன் ஓடிவந்து கட்டியணைத்துக்கொள்கிறார். அப்போது அங்கிருந்த அனைவரும் இதை கண்டு நெகிழ்ந்து போகின்றனர். அந்த பதிவில் தன்னுடைய இந்த பயணத்திற்கு உதவி செய்த தனது நண்பர்களை குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருக்கிறார் ஷ்ரத்தா. மேலும் அந்த பதிவில்,"ஆச்சர்யமான பயணத்தின் பின்னணியில் உள்ள கதை இது. நீங்கள் எங்கிருந்தாலும் குடும்பம் மிகவும் முக்கியமானது, எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். எப்போது எடுக்கப்பட்டது என்பது சரிவர தெரியாத நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | உறைந்து போன நகரம்.. 5 நிமிஷம் வெளியே போனாலும் ரிஸ்க்.. வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லயா ?
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)