கடன் வாங்கி கனடாவுக்கு படிக்க போன இந்திய மாணவர்.. இரண்டே நாளில் நடந்த துயரம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jan 02, 2023 08:15 PM

இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள், பல நாடுகளுக்கு சென்று தங்களின் உயர் கல்வியை கற்கவும் செய்கின்றனர். இதற்காக பெரும் பாடுபட்டு தயாராகி, தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை கூட சிறந்த முறையில் பயன்படுத்தி உயர் கல்வி கற்று வாழ்வின் லட்சியத்தை அடையவும் வழி செய்கின்றனர்.

Indian student went for canada to studies passed away in two days

Also Read | "பெட்ரோல் போட காசு இல்லண்ணா".. போலீஸ் கிட்ட உதவி கேட்ட இளைஞர்.. அடுத்த நிமிஷமே நடந்த நிகழ்வு.. மனசை தொட்ட காவலர்!!

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் இந்தியாவில் இருந்து கனடா நாட்டிற்கு உயர் கல்விக்காக சென்ற மாணவருக்கு நேர்ந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹராசிஸ் சிங் பிந்த்ரா. இவர் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்திருந்த நிலையில் உயர் கல்விக்காக சமீபத்தில் கனடா நாட்டிற்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஹராசிஸ் சிங்கின் தந்தை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவரது தாயார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தியாவில் பெரிதாக வேலை கிடைக்காத சூழலில் கனடாவில் உயர் படிப்பு படிக்க வேண்டும் என்றும் ஹராசிஸ் முடிவு செய்துள்ளார். அதன்படி பலரிடமும் கடன் வாங்கி சமீபத்தில் கனடா நாட்டிற்கும் சென்றுள்ளார் ஹராசிஸ்.

Indian student went for canada to studies passed away in two days

கனடாவின் பிராம்டன் என்னும் நகரில் இருந்த ஹராசிஸ் சிங், சிம் கார்டு ஒன்றை வாங்குவதற்காக கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கே திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ஹராசிஸ் சிங்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்திய இளைஞர் ஒருவர், உயர் கல்விக்காக கனடா நாட்டிற்கு சென்ற இரண்டாவது நாளிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது. இது தொடர்பாக ஹராசிஸ் சிங்கின் தாத்தா ஒருவர் பேசுகையில், அவரது தாயார் ஆசிரியையாக இருந்து குடும்பத்தை பார்த்து வருவதாகவும், குடும்பத்தார் அனைவரும் கடன் வாங்கி தான் ஹராசிஸை கனடாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read | தந்தை இறந்த நேரத்தில்.. பிரதமர் மோடி செஞ்சது என்ன?.. நினைவுகூர்ந்த VHP தலைவர்!!

Tags : #INDIAN STUDENT #CANADA #STUDY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian student went for canada to studies passed away in two days | World News.