30 வருஷம் யாராலுமே தொட முடியாத மாஃபியா மன்னன்.. கடைசில சுலபமா சிக்கிய சம்பவம்.. இதை யாருமே எதிர்பார்க்கல..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jan 19, 2023 10:17 AM

இத்தாலியில் 30 வருடங்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபரை மிக எளிதான முறையில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Messina Denaro caught after 30 years on the run in Italy

Also Read | ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்த பிரிட்டோரியா கேபிடல்ஸ்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு விக்கெட்..!

இத்தாலியை சேர்ந்தவர் மதேயோ மெஸினா டெனேரோ. 14 வயது முதல் வன்முறை வழக்குகளில் இவர் பெயரும் அடிபட துவங்கி இருக்கிறது. இவருடைய தந்தையும் ஒரு மாஃபியா கும்பலை சேர்ந்தவர் என சொல்லப்படுகிறது. 20 வயதில் தனித்து இயங்கிய மதேயோ, தனக்கு போட்டியாக இருந்த கும்பல்களை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, தனக்கென ஒரு கூட்டத்தை மதேயோ அமைத்து மிகப்பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தையும் நடத்தி வந்திருக்கிறார்.

இதனிடையே, தென்னமெரிக்க நாடுகளிலும் மதேயோ-வின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கி இருக்கிறது. அதனுடன் இவர் பற்றிய குற்ற பின்னணியும். இதனால் இத்தாலியின் தேடப்படும் குற்றவாளியாக மதேயோ அறிவிக்கப்பட்டிருக்கிறார். அது துவங்கி பல நாட்டு காவல்துறை மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனாலும், அவரை நெருங்க முடியவில்லை. இதற்கு காரணம் தென்னமெரிக்க நாடுகளில் அவருக்கு இருந்த அதீத செல்வாக்கு தான் என சொல்லப்படுகிறது.

Messina Denaro caught after 30 years on the run in Italy

1993ஆம் ஆண்டில் ரோம், மிலன், ப்ளாரன்ஸ் ஆகிய நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளிலும் மதேயோ-விற்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் அப்போது மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டையும் நடைபெற்றது. ஆனாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் மதேயோ-வின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளில் மோசமடைந்திருக்கிறது. இதனால் மருத்துவ சிகிச்சை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மதேயோ இத்தாலியில் உள்ள சிசிலி மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவரவே அவருக்கு வலை வீசி காத்திருந்தனர். வழக்கமான பரிசோதனைக்காக வந்த இடத்தில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரை கைது செய்து வெளியே அழைத்துச் செல்லும்போது அங்கிருந்த மக்கள் கைதட்டி ஆராவரம் செய்திருக்கின்றனர்.

Messina Denaro caught after 30 years on the run in Italy

30 வருடங்களாக யாராலுமே நெருங்கமுடியாத மாஃபியா மன்னனாக திகழ்ந்த மதேயோவை எளிதாக போலீசார் கைது செய்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | "இது எப்படிங்க அவுட்டு?".. சர்ச்சையை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விக்கெட்.. கொதித்தெழுந்த கிரிக்கெட் பிரபலங்கள்!!

Tags : #MESSINA DENARO #ITALY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Messina Denaro caught after 30 years on the run in Italy | World News.