இந்தியாவையே உலுக்கிய மேவாட் கேங்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழக போலீஸ்.. பதறவைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து 72,79,000 ரூபாய் களவு போயிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். வேலூர் சரக காவல் துணைத் தலைவர் முத்துச்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கின. சிசிடிவி பதிவுகள் மூலம் இந்த கொள்ளையில் ஈடுபட்டது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து ஆந்திரா, குஜராத் ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்தன.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது ஆரிப் மற்றும் முகமது ஆசாத் ஆகிய இருவரையும் ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்திருந்தனர். இதனையடுத்து இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மேவாட் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இந்திய அளவில் மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் மிகவும் அபாயகரமான முறையில் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என சொல்லப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மேவாட் பகுதியை சேர்ந்த கொள்ளை கும்பல்களை பிடிக்க பல மாநில காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்த தமிழக போலீஸ், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களை பிடிக்கும் பணியில் தனிப்படை காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
அதன் பலனாக இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் இருவரை தமிழக காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பதுங்கி இருந்த குர்தீப் பாஷா மற்றும் அஹாப் உசைன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.