விமானத்துக்குள்ள இருந்த எலி.. ஒரு மணி நேரம் DELAY-ஆக புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. என்ன நடந்துச்சு..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஏர் இந்தியா விமானத்தில் எலி இருந்ததால் ஒரு மணி நேரம் பயணம் தாமதமானதாக ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியிருக்கிறது. கடைசியில் விமானத்திற்குள் எலி இருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எலி விமானத்தில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் பயணம் துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் எலி
கடந்த வியாழக்கிழமை மதியம் 2.15 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்த தாமதத்திற்கு விமானத்தில் ஒரு எலி காணப்பட்டதே காரணம் என தெரிவித்திருக்கிறார் ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரி ஒருவர்.
விமான அட்டவணையின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள ஷேக் உல்-ஆலம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 3:20 மணியளவில் புறப்பட்டது.
விமானத்தில் எலி இருந்த சம்பவம் குறித்து இந்திய விமான போக்குவரத்துத்துறை இயக்குனரகம் (DGCA) விசாரணையை துவங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம்
கடந்த ஆண்டு மே மாதம் ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் வவ்வால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நெவார்க் சென்ற ஏர் இந்தியா விமானம் டேக் ஆஃப் செய்யப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தின் உள்ளே வவ்வால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் டெல்லிக்கே விமானத்தை திருப்பினார் விமானி.
அதன்பிறகு வனவிலங்கு பாதுகாப்புத்துறை ஊழியர்கள் விமானத்தில் இருந்த வவ்வாலை பிடித்த பிறகு விமானம் தனது பயணத்தை துவங்கியது. இந்நிலையில் நேற்று எலி இருந்ததால் ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமானது குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8