‘CSK வீரருக்கு முத்தம் கொடுத்த பொல்லார்டு’.. மேட்சுக்கு நடுவே நடந்த நெகிழ்ச்சி.. கொண்டாடும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் லீக் போட்டியின்போது சிஎஸ்கே வீரருக்கு மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு முத்தம் கொடுத்த வீடியோ ரசிகர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர்.
அதேபோல் சென்னை அணியை பொறுத்தவரை முகேஷ் சௌத்ரி 3 விக்கெட்டுகளும், பிராவோ 2 விக்கெட்டுகளும் தீக்ஷனா மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்ததன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோவுக்கு மும்பை அணி வீரர் பொல்லார்டு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் போட்டியின் 14-வது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு அருகில் தட்டிவிட்டு அப்படியே நின்றார். பந்து நேராக பிராவோவின் கைக்கு சென்றது. அவர் விளையாட்டாக பந்தை பொல்லார்டு மீது தூக்கி வீசினார். அவரும் பந்தை தட்டி விட்டு நேராக பிராவோவின் தலையில் முத்தம் கொடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களான பிராவோ மற்றும் பொல்லார்டு நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இருவரும் எதிரெதிர் அணியில் விளையாடினாலும் எப்போதும் நண்பர்களாகவே பழகி வருகின்றனர். இது இரு அணி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பொல்லார்டு ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pollard kisses Bravo 😍🤣😱 pic.twitter.com/OPW8qpW1QJ
— Big Cric Fan (@cric_big_fan) April 21, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8