மொத்தமாக.. '18 ஆயிரம்' பேரை 'வீட்டுக்கு' அனுப்பும்.. 'பிரபல' நிறுவனம்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 13, 2019 12:50 PM

உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தம் காரணமாக மிகப்பெரிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வேலை நீக்கம் செய்து வருகின்றன.அந்தவகையில் பிரபல வங்கியான டாய்ச் 18 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.

Deutsche Bank plans 18,000 job cuts outside Germany

ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஃபர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்  சர்வதேச வங்கி டாய்ச் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. வணிகப் பிரிவான முதலீட்டு வங்கிப் பிரிவை, மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வாறு மறுசீரமைப்பதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெறமுடியும் என்றும், நஷ்டத்தினை குறைக்கமுடியும் எனவும் இந்த வங்கி அறிவித்துள்ளது.

டாய்ச் மேற்கொள்ளும் இந்தப் பணிநீக்கமானது அடுத்து வரும் 2021-ம் ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்றும், இந்தப் பணி நீக்கத்தால் ஜெர்மனி தவிர இதன் கிளைகள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இதன் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக லண்டனை சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி வங்கி 10,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #JOBS