அட, யாரு பாத்த 'வேலை'யா இது ... திருத்தம் செய்த 'வாக்காளர் அடையாள அட்டையில்' ... 'அதிகாரி' கையெழுத்துடன் நாயின் படம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 05, 2020 01:41 PM

மேற்குவங்க மாநிலத்தில் முதியவர் ஒருவருக்கு நாய் படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dog image misplaced in Voter id in West Bengal

மேற்குவங்க மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் சுனில் கர்மாகர்(64). இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அட்டையை பெற்றுக் கொண்ட  நிலையில், அதில் தனது படத்திற்கு பதிலாக  நாய் படம் இடம் பெற்றிருந்ததைக் கண்ட சுனில் கர்மாகர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சுனில் கர்மாகர் கூறுகையில், 'திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை என்னிடம் கொடுத்த போது அதில் எனது புகைப்படத்திற்கு பதில் நாயின் படம் இருந்தது. அதில் அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகாரளிக்கவுள்ளேன்' என்றார்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'ஆன்லைன் விண்ணப்பம் மூலம் வாக்காளர் அட்டை தயாரிக்கும் போது இந்த தவறு நிகழ்ந்துள்ளது. சுனில் கர்மாகரின் போட்டோ மாற்றப்பட்டு, விரைவில் திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டை அவருக்கு வழங்கப்படும்' என்றார்.

 

 

Tags : #WEST BENGAL #VOTER ID #ELECTION COMMISSION