'வீட்டிலேயே பாட்டில், மூடி, ஸ்டிக்கர்லாம் ரெடி பண்ணியாச்சு...' 'ஸ்பிரிட் வாங்க போன டைம்ல தான் வசமா...' கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 25, 2020 05:20 PM

புதுக்கோட்டை அருகே போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து பிரபல கம்பெனியின் லேபிள் மற்றும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

The company that invented machine producing fake liquor seize

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேம்பல் வாண்டாகோட்டையை சேர்ந்தவர் ராஜா(46). இவரது நண்பர்கள் ஆலங்குடி பாலு (35), புதுச்சேரியை சேர்ந்த தர்மலிங்கம் என்ற விஜி(37) ஆகிய மூவரது ஏற்பாட்டில் மது தயாரிப்பதற்கான உபகரணங்களை சேகரித்து வந்தனர். நேற்று புதுச்சேரி சென்ற ராஜா, பாலு ஆகியோர் அங்கு விஜியை சந்தித்து மது தயாரிக்க தேவையான ஸ்பிரிட் மற்றும் மூலப்பொருட்களை வாங்கிக்கொண்டு காரில் விழுப்புரம் வழியாக வாண்டாக்கோட்டை திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்த தகவலறிந்த விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடிக்க ராஜாவின் காரை பின்தொடர்ந்து வந்தனர். உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் புதுக்கோட்டை வந்த விழுப்புரம் போலீசார் நள்ளிரவு வாண்டாக்கோட்டையில் உள்ள ராஜாவின் வீட்டருகே நின்ற அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது விஜி சிக்கினார்.

விஜியிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ராஜாவின் வீட்டில் மது தயாரிக்க கடந்த 5 நாட்களாக மது பாட்டில்கள், மூடிகள், ஸ்டிக்கர்கள் வாங்கி தயார் செய்ததும், நேற்று புதுச்சேரியில் இருந்து ஸ்பிரிட் வாங்கி வந்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜியை கைது செய்தனர். பின்னர் வீட்டிலிருந்த மதுபான பாட்டில் மூடிகள், லேபிள்கள், இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் காரில் 16 கேன்களில் இருந்த 560 லிட்டர் ஸ்பிரிட் உள்ளிட்ட மூலப்பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : #LIQUOR