'சொன்னதை எல்லாம் செய்றாரே'...'அடுத்த அதிரடியை தொடங்கிய ஜெகன் மோகன்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 08, 2019 04:06 PM

ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக ஜெகன் மோகன் நிறைவேற்றி வருகிறார். தற்போது அவர் அடுத்த அதிரடியை தொடங்கியிருக்கிறார்.

First step towards a phased liquor ban in Andhra

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஜெகன் மோகன் அறிவித்திருந்தார். அதனை தற்போது செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தமிழகத்தைப் போன்று, அரசே மது விற்பனையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெகன்மோகன் எடுக்கும் பல்வேறு முயற்சிகளுக்கு அம்மாநில மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் ஆந்திராவில் ஆற்று மணல் எடுக்க தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #JAGANMOHAN REDDY #YSR CONGRESS #ANDHRA PRADESH #LIQUOR