'அவங்க 4 பேரும் ஃபுல் மப்புல வந்தாங்க...' 'கார்ல தான் பிக்கப் பண்ணிருக்காங்க...' 'சரக்கு வாங்கி கொடுத்தது யாருன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு...' பின்னி பெடலெடுத்த சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவிகளை காரில் அழைத்துச் சென்று, மது வாங்கி கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், பிளஸ் 1 பயிலும் மாணவிகள் நான்கு பேர், சில தினங்களுக்கு முன் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது தள்ளாடியபடி வந்தனர். தள்ளியாடியபடி வந்த மாணவிகளை பெற்றோர் பரிசோதித்த போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. ஒரு மாணவியின் செல்போனில் பேசிய எண்களை கொண்டு விசாரித்தபோது, மது வாங்கி கொடுத்தது, அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த சேதுராஜ்(32) என தெரிந்தது. வாடகை கார் டிரைவரான அவர், காரில் மாணவிகளை அடிக்கடி அழைத்துச் செல்வதும், மது வாங்கி கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
நேற்றும், மாணவிகளை காரில் ஏற்றி சென்றபோது, திட்டமிட்டு அந்த வழியாக வந்த பெற்றோர் சேதுராஜின் காரை மடக்கி பிடித்தனர். பிடித்ததோடு மட்டுமல்லாமல் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். சங்கரன்கோவில் போலீசார், சேதுராஜ் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். சேது ராஜின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு துணையாக இருந்த அஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
