'காசு பணம் இல்லாம கஷ்டப்பட்டேன்...' 'ஆற்றுக்கு போனப்போ கிடைச்ச மீன்...' - இப்போ இவ்வளவு ரூபாய் சம்பாதிச்சுட்டேன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்காளத்திலுள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தின் சுந்தரவன பகுதியில் வசிப்பவர் புஷ்பா கர். இவர் சாகர் தீவுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தினமும் செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் மீன் பிடிக்கச் சென்றபோது, அங்குள்ள ஒரு ஆற்றில் 52 கிலோ கனமுள்ள பெரிய மீன் ஒன்று கிடந்ததைப் கண்டுள்ளார். போலா எனும் கடல் மீன் வகையைச் சேர்ந்த இந்த மீன், இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. ஒதுங்கிய மீன் ஆற்றில் இழுத்து வரப்பட்டுள்ளது.
இறந்த மீன் என்பதால் அதனை உணவுக்கு பயன்படுத்த முடியாது. எனினும் மருத்துவ நோக்கங்களுக்காக இந்த மீன் நல்ல விலை போகும் என சக மீனவர்கள் அந்த பெண்ணுக்கு யோசனை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து ஒரு கிலோ மீன் 6,200 ரூபாய்க்கு விற்று, தற்போது ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பாதித்து உள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு கூட புளபர் போன்ற உறுப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலர்ந்த புளபர் அல்லது ஃபிஷ்மா ஒரு கிலோ ரூ .80,000 வரை விலை போகுமாம்.
நீண்ட காலமாக, பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த தனக்கு இந்த மீன் மூலம் இவ்வளவு வருமானம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார் புஷ்பா கர்.