“மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்!”.. ஹீரோ மாதிரி வந்து ஆக்ஷனில் இறங்கிய ‘மோப்பநாய்’ சோபியா! அப்படி என்னதான் செஞ்சுது?
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஷ்கர் மாநிலத்தில் சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை மோப்பநாய் ஒன்று கண்டுபிடித்ததை அடுத்து பாராட்டைப் பெற்றுள்ளது.

மாவோயிஸ்டுகள் அதிக நடமாட்டம் உள்ள ராஜ்நன்கான் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய திபெத் எல்லைக் காவல் துறையினருடன், சோபியா சென்ற மோப்ப நாயும் அழைத்துச் செல்லப் பட்டது.
பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற அந்த வழியில் போடப்பட்டுக் கொண்டிருந்த சாலையில், அப்போது முன்னால் சென்ற சோபியா அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ எடை கொண்ட அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை கண்டுபிடித்தது.
Dog Malinois – Sophia also known as शिक्षा sniffs the explosive. 40th Battalion ITBP unearthed an IED weighing 7 KG on an under construction road link between Bega Salewara to Samudpani in Bakarkatta, District Rajnandgaon, Chhattisgarh today. The IED was later destroyed#Himveers pic.twitter.com/QcvxqugocP
— ITBP (@ITBP_official) September 27, 2020
இதுபற்றி கூறிய பாதுகாப்பு படையினர் இந்த குண்டு வெடித்திருந்தால் பலத்த உயிர் சேதம் உண்டாகியிருக்கும் என்று கூறியதுடன் சோபியாவை வெகுவாக பாராட்டினர்.

மற்ற செய்திகள்
