VIDEO: விடிய விடிய ’ஆபாச நடன’ பார்ட்டி... அரசியல்வாதி, தொழிலதிபர்கள் கும்மாளம்...!’ - உள்ளே சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாக்டவுனில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் 250 பேர் ஒன்றாகக் கூடி பார்ட்டி நடத்தியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தான் ஆரம்பித்த புதிய தொழிலைக் கொண்டாடும் விதமாக, ஸ்டார் ஹோட்டல் ரிசார்ட்டை வாடகைக்கு எடுத்து, பெல்லி டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இப்படி ஒரு பார்ட்டியை நடத்தியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், பார்ட்டி நடந்த இடத்துக்கு சென்றபோது, பெல்லி டான்ஸ் நிகழ்ச்சியை தடுக்கவும், கைது செய்யவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த பார்ட்டியில் பங்கேற்றவர்கள் எல்லாருமே முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சிக்காரர்களும் என்பதால், போலீஸாரை அவர்கள் நடவடிக்கை எடுக்க விடவில்லை என தெரிகிறது.
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியானதை அடுத்து, கொரோனா சூழலில் தனி மனித மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும், பொறுப்பில்லாமலும் இருந்த இந்த பார்ட்டி கும்பலுக்கு அனைவருமே கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
