'பாவம் யாரு பெத்த புள்ளையோ அந்த போட்டோகிராபர்'... 'திடீரென டென்ஷனான புது மாப்பிள்ளை'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமண நிகழ்வுகளை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிக் கொடுப்பதில் போட்டோகிராபர்களின் பங்கு என்பது அபரிவிதமானது. அந்த வகையில் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போட்டோகிராபருக்கு நடந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வட இந்தியா ஒன்றில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப் பெண்ணும், மண மகனும் மேடையில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அப்போது போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். பின்னர் மணமகளை மட்டும் புகைப்படம் எடுக்கும் அவர், சரியான போஸிற்காக மணப்பெண்ணின் கன்னத்தில் கைவைத்து இப்படி நில்லுங்கள் எனச் சரி செய்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
அந்த நேரம் இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை திடீரென கோபப்பட்டு ஓங்கி பளார் என போட்டோகிராபரை அறைகிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழப்பத்தில் நிற்கிறார். ஆனால் புது மாப்பிள்ளை போட்டோகிராபரை அடித்த மறு கணமே மணப்பெண் குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறார். அவரால் சிரிப்பை அடக்க முடியாமல் தரையில் விழுந்து சிரிக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் சிலர், இது பிராங்க்காக கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். மணப்பெண் இதைச் செய்து இருக்கலாம் எனவும் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
I just love this Bride 👇😛😂😂😂😂 pic.twitter.com/UE1qRbx4tv
— Renuka Mohan (@Ease2Ease) February 5, 2021

மற்ற செய்திகள்
