காதலுக்காக ஆணாக மாறிய பெண்.. அடுத்த ஆணை காதலித்து கிளம்பி போன காதலி.. அதிர்ச்சி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 26, 2023 11:22 AM

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனல். இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும் இவரது வீட்டின் மேல் தளத்தை வாடகை விட முடிவு செய்திருந்த போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த சனா என்ற பெண், அங்கே அரசு ஊழியராக இருக்க அங்கே வாடகை எடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டில் தங்கி உள்ளார்.

UP woman change as male lover moves out to live with other man

Images are subject to © copyright to their respective owners

இதன் காரணமாக, சோனல் மற்றும் சனா ஆகிய இருவரும் நட்பாக பழகி வந்தனர். மேலும் நாளடைவில் நெருங்கிய தோழிகளாகவும் அவர்கள் மாறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், அவர்களுக்கு இடையே தோழி என்பதை தாண்டி இன்னும் இணக்கமான உறவாகவும் மாறி உள்ளது. இருவரும் ஒன்றாக இணைந்து வாழவும் முடிவு செய்திருந்த நிலையில், இது பற்றிய விவரம் சோனலின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், சனாவையும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.

தொடர்ந்து, அரசு சார்பில் சனாவுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட, கடந்த 2017 ஆம் ஆண்டு அங்கே குடியிருந்து வந்துள்ளார் சனா. இந்த நிலையில், சோனலும் தனது வீட்டில் இருந்து கிளம்பி, சனாவுடன் இணைந்து வாழ தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றது. இப்படி இணைந்து வாழ்ந்தால் சமுதாயம் தவறாக பேசும் என எண்ணி, ஆணாகவும் மாற சனா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners

இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட சனா, ஆணாக மாற முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்க, அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிக் கொண்டார். அதே போல இந்த சிகிச்சைக்கு தொடர்பான ஆவணங்களில் சனாவின் மனைவி என்றும் சோனல் கையெழுத்திட்டதாக தகவல்கள் கூறுகின்றது.

இதன் பின்னர் ஆணாக மாறி, தனது பெயரையும் மாற்றிக் கொண்டு சோனலுடன் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. சனா அரசு அதிகாரி என்ற நிலையில், சோனலும் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு சேர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், சிறிது நாட்கள் கழித்து சனாவை கண்டு கொள்ளாமலும் சோனல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த வேறொரு ஆணுடனும் சோனலுக்கு காதல் உருவானதாக தகவல்கள் கூறுகின்றது. இதனை அறிந்ததும் காதலுக்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சனா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, சனாவை பிரிந்து தான் காதலித்த நபருடனும் சோனல் சென்றதாக கூறப்படும் நிலையில், சனா பிரச்னை செய்வார் என எண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

மறுப்பக்கம், தனக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தையும் சனா நாட, பின்னர் சோனல் அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றி வரும் நபரை காதலித்ததால் அவருடன் வாழ முடிவு செய்து சனாவை பிரிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அடுத்த மாதம் விசாரணை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Tags : #LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UP woman change as male lover moves out to live with other man | India News.