"'அஞ்சு' வருஷமா தேடிட்டு இருக்கேன்... இன்னும் கெடைக்கல 'சார்'... எனக்கு ஒரு 'முடிவு' தெரிஞ்சே ஆகணும்!!... '2' அடி இளைஞரால் அதிர்ந்த 'போலீசார்'!
முகப்பு > செய்திகள் > இந்தியா'2' அடி இளைஞர் ஒருவர், போலீஸ் நிலையத்தில் வைத்த கோரிக்கை ஒன்றால், அதிகாரிகள் அதிர்ந்தே போயுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்திலுள்ள கைரானா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் அசீம் மன்சூரி (Azeem Mansuri). 26 வயதாகும் இவர், 2 அடி உயரம் மட்டுமே உள்ளதால், சக மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். இதனால், ஐந்தாம் வகுப்புடன் தனது பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார்.
அதன் பின்னர், தனது சகோதரருடன் இணைந்து, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அஸீமுக்கு 21 வயது ஆனதும், அவருக்கு பெண் பார்க்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஆனால், அசீமை பார்க்க வரும் பெண் வீட்டாரும், மணப்பெண்களும் அவரது உயரத்தை காரணம் காட்டி, பின் வாங்கியுள்ளனர். இருந்தாலும், சளைக்காத அசீம், கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண் தேடி வந்துள்ளார். இதனையடுத்து, உள்ளூர் போலீஸ் நிலையம் சென்ற அசீம், தனது உயரத்தைக் காரணம் காட்டி, யாரும் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும், இதனால் தனக்கு மணப்பெண்ணைத் தேடி திருமணம் செய்து வைத்து, பொது சேவை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையால் சற்று அதிர்ந்து போன காவல் துறையினர், எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், இருந்தாலும் ஏதாவது உதவ முடியுமா என முயற்சி செய்கிறோம் என்றும், போலீசார் தெரிவித்துள்ளனர். தனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என உயர் அதிகாரிகளை அசீம் நாடுவது ஒன்றும் புதிதல்ல.
கடந்த 2019 ஆம் ஆண்டு, தனக்கு திருமணம் செய்து வைக்க, மணமகளைத் தேடித் தரும்படி, காவல் நிலையத்தை நாடிய அசீம், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து, தனது ஆசையை அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கும் அசீம் மன்சூரி, 'இதை நினைத்து நான் பல நாட்கள் தூங்காமல் இருந்துள்ளேன். இதற்காக, நீண்ட காலமாக நான் முயற்சி செய்து வருகிறேன். எனது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையா?' என ஆதங்கத்துடன் அசீம் குறிப்பிட்டுள்ளார்.